Wednesday 8th of May 2024 12:26:33 AM GMT

LANGUAGE - TAMIL
ஹரி, மேகன் தம்பதியர் பாதுகாப்பை விரைவில் நிறுத்துகிறது கனடா அரசு!

ஹரி, மேகன் தம்பதியர் பாதுகாப்பை விரைவில் நிறுத்துகிறது கனடா அரசு!


பிரிட்டன் அரச குடும்பத்திலிருந்து வெளியேறி கனடாவில் குடியேறியுள்ள ஹரி மற்றும் மேகன் தப்பதிகளுக்கு வழங்கிவரும் பாதுகாப்பை கனடா விரைவில் நிறுத்திவிடும் என்று மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

ஹரி - மேகன் தம்பதியர் கனடா வந்ததில் இருந்து அவர்களுக்கு ரோயல் கனடிய மவுண்டட் பொலிஸார் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். பெருநகர காவல்துறையின் வேண்டுகோளின் பேரில் தம்பதியினருக்கு ஆர்.சி.எம்.பி. பாதுகாப்பு அளித்து வருகிறது.

ஹரி மற்றும் மேகன் தப்பதியர் தற்போது சர்வதேச அளவில் பாதுகாக்கப்படவேண்டிய நபர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உதவிகளை வழங்க வேண்டிய கடமை கனடாவுக்கு உள்ளது என கனடா பொதுப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இளவரசருக்கும் அவரது மனைவி மேகனுக்கும் பாதுகாப்பு வழங்க யார் பணம் செலுத்துவார்கள்? என்ற கேள்விகளை கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பலமுறை எதிர்கொண்டனர்.

இலாப நோக்கற்ற அங்கஸ் ரீட் நிறுவனம் ஜனவரி மாதம் நடத்திய கருத்துக் கணிப்பில் கருத்து வெளியிட்ட 73 விதமான கனேடியர்கள் ஹரி - மேகன் தம்பதியர் பாதுகாப்பு செலவுகளை கனடா ஏற்றுக்கொள்ளக் கூடாது என கருத்து வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே ஹரி மற்றும் மேகன் தப்பதிகளுக்கு வழங்கிவரும் பாதுகாப்பை கனடா விரைவில் நிறுத்திவிடும் என்று மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE